ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை! - ரியல் எஸ்டேட் அதிபர்

மதுரை: ஆண்டிபட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madurai
Madurai
author img

By

Published : Nov 21, 2020, 6:44 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

இதில், கொலை செய்யப்பட்டது மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த செல்லையா மகன் நாகு என்ற நாகேந்திரன்(50) எனத்தெரியவந்தது. மேலும் இறந்தவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் செய்து வந்ததாகவும், கடந்த நவம்பர் 19ஆம் தேதி வியாழக்கிழமை நாகேந்திரனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் ஆகியோர் உறவினர் விஷேசத்திற்காக திருச்சிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக இருந்த நாகேந்திரனை அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்தி வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து சாலையில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பின்னர் நாகேந்திரனின் உடல் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனை கொலை செய்த நபர்களை பிடிக்க ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவணதேவந்திரன், கடமலைக்குண்டு ஆய்வாளர் சுரேஷ், ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்சா ஆகியோர் தலைமையில் தலா 4 காவல்துறையினர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் மதுரை மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சம்பந்தபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.