ETV Bharat / state

‘ஆளுநரின் திருக்குறள் குறித்த கருத்தை விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர்’ - ஆர்பி உதயகுமார் - அம்மா பேரவை சார்பில் ஆர் பி உதயகுமார்

பிரதமா மோடி, ஆளுநர் ரவி ஆகியோர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும்போது தமிழ் மொழியின் பெருமையை உணர முடிவதாக அதிமுக துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் திருக்குறள் குறித்த கருத்தை விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர் - ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Oct 9, 2022, 9:56 PM IST

மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும், சென்னையும் பெற்றன. ஆனால் சமீபத்தில் 10 லட்சம் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் 45 நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் சென்னை 44ஆவது இடத்திலும் மதுரை கடைசியில் 45ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசு நகரத் தூய்மையின் மீது கவனம் செலுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது தற்பொழுது அதை வலுவாக மீண்டும் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

தென் மாவட்டங்களில் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. 6095 வழக்குகள் சிறாருக்கு எதிரான குற்றங்கள் என பதிவாகியுள்ளன. இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதும் தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருப்பதும் வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் 80% விழுக்காடு வடிகால் பணிகள் முடிந்ததாக கூறி இருக்கிறார். ஆனால் 30 முதல் 40 சதவீதம் வரையே பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கள நிலவரம் சொல்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழையின் பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

அதேபோல அரசு வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் தடுப்பு, ரவுடிகள் தடுப்பு என டிஜிபி பல திட்டங்களை செயல்படுத்துகிறார் ஆனால் அது நடைமுறையில் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது போதைப் பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன.

திருக்குறள் பற்றி கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளுநரின் கருத்தை சிலர் விளம்பரத்திற்காக எதிர்த்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆளுநர் என முக்கிய தலைவர்கள் பேசும் பொழுது திருக்குறளை குறிப்பிட்டு வருவது தமிழ் மொழிக்கான பெருமை என்றார்.

ஜி யு போப்-இன் மொழிபெயர்ப்பில் ஆளுநர் சந்தேகம் எழுப்புவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆர்.பி. உதயகுமார் திருக்குறளுக்கு பலர் விளக்க உரை மொழிபெயர்ப்பு செய்து உள்ளனர். அது அலசி ஆராய்ந்து மொழிபெயர்ப்பு செய்யலாம் என்றார்.

ஆளுநரின் திருக்குறள் குறித்த கருத்தை விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர் - ஆர்.பி. உதயகுமார்

திருமாவளவன் சைவம், வைணவம் என அறநிலையத்துறையை பிரிக்க வேண்டும் என கூறுகிறார் இது பற்றிய கேள்விக்கு, சைவம், வைணவம், பௌத்தம் இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றனர். எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தில் மக்களுக்கான முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவோம் குறிப்பாக 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என கூறினார்.

இதையும் படிங்க:"நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.