ETV Bharat / state

பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற ஜெர்லின் அனிகாவுக்கு வரவேற்பு! - madurai govt school student

பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஜெர்லின் அனிகாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற ஜெர்லின் அனிதாவுக்கு பொதுமக்கள் வரவேற்பு!

author img

By

Published : May 19, 2022, 7:01 AM IST

Updated : May 19, 2022, 7:36 AM IST

மதுரை : பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 தங்க பதக்கங்களை வென்று மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஜெயரட்சகன் மகள் ஜெர்லின் அனிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற 24ஆவது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் ஜெர்லின் அனிகா பங்கேற்றார். அதில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரிய வீராங்கனை கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற ஜெர்லின் அனிதாவுக்கு பொதுமக்கள் வரவேற்பு!

கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா - அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றது. மேலும் குழு பேட்மிட்டன் போட்டியிலும் தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஜெர்லின் அனிகாவிற்கு அவரது பள்ளி தோழிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் கூறுகையில், “மாநகராட்சி பள்ளியில் பயின்று பேட்மிட்டன் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு எனது மகள் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அனைவரிடத்திலும் விதைத்து உள்ளார்.

தமிழக அரசு ஜெர்லின் அனிகாவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க : தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மாற்றுத்திறனாளி தேர்வு - அரசு உதவி செய்ய கோரிக்கை

Last Updated : May 19, 2022, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.