பி.டி.ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் (1892 – 1974) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி.டி.ராஜன், 1920ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்த பி.டி.ராஜன், 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
அப்போது முதலமைச்சராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சென்னை மாகாணத்தின் தற்காலிக முதலமைச்சராக பி.டி.ராஜன் பதவி வகித்தார்.
இதையும் பார்க்க : நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - மகாகவிக்கு நினைவஞ்சலி!