ETV Bharat / state

மதுரையில் வீட்டின்முன் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் எதிர்ப்பு - Madurai District news

மதுரை அருகே வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்காக, எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டின் உரிமையாளரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Protest against the installation of a CCTV camera in front of a house in Madurai by terror weapons including scythes

author img

By

Published : Oct 8, 2021, 10:50 PM IST

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வசித்து வருபவர், அம்சவள்ளி. இவர் தனது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், புதியதாக மூன்று சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வீட்டின் உரிமையாளரான அம்சவள்ளியை வெளியே அழைத்து அரிவாளை காட்டி மிரட்டியும் வெட்ட முயன்றுள்ளனர்.

மேலும் உடனடியாக சிசிடிவி கேமராவை அகற்றுமாறும் பெண்மணிக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அம்சவள்ளி மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரகளையில் ஈடுபட்ட நால்வரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என்பதும்; உடனடியாக அவர்கள் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகவும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.