ETV Bharat / state

உசிலம்பட்டியில் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம் - ரூ.10 லட்சம் பரிசை வென்றது! - kodikulam theendamai

உசிலம்பட்டி அருகேவுள்ள கொடிக்குளம் என்ற கிராமம் தமிழ்நாடு அரசின் தீண்டாமை ஒழிப்பை கடைபிடித்ததற்காக ரூ.10 லட்சம் பரிசை வென்றுள்ளது.

உசிலம்பட்டியில் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம்

author img

By

Published : Apr 28, 2022, 8:07 PM IST

Updated : Apr 28, 2022, 10:31 PM IST

மதுரை : தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் தீண்டாமையை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்தைக் காக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 2012ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அத்திட்டத்தின்படி கிராமத்தைத் தேர்வு செய்வதற்கு எட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதுடன் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகிறது. அந்தக் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொதுக்கோயில், குடிநீர் கிணறு, கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கும் நிலை இருக்க வேண்டும்.

தனியாருக்குச் சொந்தமான கிணறுகளில் ஆதி திராவிடர் மக்கள் தண்ணீர் எடுப்பதற்குத் தடை இருக்கக்கூடாது. ஆதி திராவிட மக்களுக்கு இதர சமூக மக்கள், அவர்களின் வீடுகளை வாடகைக்கு கொடுக்க வேண்டும். விழாக்களில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண வேண்டும். பிற சமூக மக்களின் விழாக்களில் ஆதி திராவிட மக்களை பங்கேற்க அழைக்க வேண்டும்.

அனைத்து சமூகத்தினரும் நல்லுறவுடன், சுமுகமாக வாழ வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற தத்துவத்தை அக்கிராம மக்கள் அனைவரும் கண்ணியமாக கடைபிடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இந்த விதிகளில் 5 அல்லது 5க்கும் மேற்பட்ட விதிகளை பின்பற்றும் கிராமத்தினை கண்காணித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் ஆட்சியர் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரை செய்வர்.

தீண்டாமையை கடைபிடிக்காத கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு

அவ்வாறு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட கொடிக்குளம் எனும் கிராமம் பரிந்துரை செய்யப்பட்டு, அதனை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அங்கீகரித்து இன்று அந்த கிராமத்தில் விழா நடத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதாவிடம் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கினார்.

இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து நிவாரணம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி!

Last Updated : Apr 28, 2022, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.