மதுரை: மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
இதையடுத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வோருக்கான படுக்கை வசதிகளைப் பார்வையிட்டார்.
ஒபிஎஸ்ஸுக்குப் புரிதல் இல்லை
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர் பேசியதாவது, “மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கரோனாவால் நாம் கற்றுக்கொண்ட பாடம் இது.
மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் என்பதற்கிணங்க மருத்துவத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது" என்றார்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவருவதற்கு ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, இருக்கும்போது பேச்சு என திமுக செயல்படுகிறது என்ற ஓ .பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
'இந்த விஷயத்தில் ஓபிஎஸ்ஸுக்குப் புரிதல் இல்லை. இதற்கு நான் பலமுறை பதிலளித்துவிட்டேன்' எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.