ETV Bharat / state

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Aug 23, 2021, 4:41 PM IST

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது எனறும், சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்ததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை ஒத்திவைத்தது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என 2009-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

உத்தரவை முறையாக நிறைவேற்றாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடபட்டது.

இந்த வழக்கு இன்று (ஆக.23) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் துரைச்சாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், எனவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் எனவும் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தமிழ்நாடு அரசு, இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பானிபூரில சிறுநீரா? - அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.