ETV Bharat / state

மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்! - supporting sasikala by Government Staffs

மதுரை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல் துறை, போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Poster
Poster
author img

By

Published : Oct 28, 2020, 4:08 PM IST

தேவர் ஜெயந்தி விழா வருகிற 30ஆம் நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சுவரொட்டியில், "பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகுபார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா 2021ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை பேரரசியாகப் பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களைக் காக்க ஆணையிடு! ஒற்றர் படை, போர்ப்படை, தற்கொலைப் படை, தயார் நிலையில் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டியின் கீழே காவல் துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி. பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்துக் கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களுடன் அச்சுவரொட்டி மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

Poster
Poster

கட்சி சார்ந்தும் சாதி அமைப்புகள் சார்ந்தும் அரசு ஊழியர்கள் இருவர் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.