மதுரை: நடிகர் விஜய் நடித்து வரும், 'பீஸ்ட்' படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதே ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள மற்றொரு இடத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
![Posters have been put up all over Madurai by Vijay fans Vijay fans தோனி விஜய் சந்திப்பு தோனி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் மதுரை விஜய் மக்கள் இயக்கம் மதுரை செய்திகள் madurai news madurai latest news msdhoni dhoni தளபதி பீஸ்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12763815_poster.png)
ஆளப்போகும் மன்னர்கள்
படப்பிடிப்பிற்காக வருகை தந்த தல தோனி - தளபதி விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து "PM தோனி - CM விஜய் ஆளப்போகும் மன்னர்கள்" எனும் வாசகங்களோடு மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டாடி வருகின்றனர்.