மதுரை: திடீர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடைய மகன் சிவபிரசாத். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனை மீறி காதல் ஜோடி நேற்று (மார்ச் 04) திருமணம் செய்து கொண்டது. இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சடையாண்டி, காதலனின் தந்தை ராமச்சந்திரனை பெரியார் பேருந்து நிலையம் அருகில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், ராமச்சந்திரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடையாண்டியைக் கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர் - ஆத்திரத்தில் அலுவலகத்தை சூறையாடிய திமுகவினர்