ETV Bharat / state

மதுரையில் மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது! - அ.கல்லுப்பட்டி

மதுரையில் இலவசமாக மது வாங்கித் தரச்சொல்லி தகராறில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

5 பேர் கைது
5 பேர் கைது
author img

By

Published : Oct 21, 2021, 8:01 PM IST

மதுரை: அ.கல்லுப்பட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் நேற்று (அக்.20) மாலை எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் உள்ள மதுபானக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் கும்பல் அருண் பிரகாஷிடம் தங்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருண் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் அருண்பிரகாஷை தாக்கியதுடன் மதுபானக் கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அருண் பிரகாஷ் எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கணேசன், கார்த்திக், அசாருதீன், விக்னேஷ் சுனில் பிரபாகர், சீனிவாசன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் டிரைவர் மரணத்தில் சந்தேகம்; ஸ்ரீஅபிநவ் மீண்டும் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.