ETV Bharat / state

நீங்கள் ஃபார்மஸி படித்தவரா..? மதுரை ரயில்வே கோட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! - இந்திய இரயில்வே மின் கொள்முதல் அமைப்பு

PMBJK திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து மருந்தியல் பட்டம் பெற்ற நபர்கள் (பி. பார்மா அல்லது டி. பார்மா) அல்லது தகுதிவாய்ந்த மருந்தாளுனர்களை நியமிக்கும் தகுதி உள்ள நபர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மருந்து கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் மருந்தகர்களுக்கான வேலை வாய்ப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 10:15 PM IST

மதுரை: இரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்திலும், அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள், ஜன் ஔஷதி திட்டம் மூலம் மருந்துப் பொருட்கள் கிடைக்கச் செய்யவும் மற்றும் தொழில்முனைவோருக்கு பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா (Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra PMBJK)-களைத் திறப்பதற்கான வழிகளை உருவாக்கவும், மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவை (PMBJKs) நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள், மருத்துவ உதவிகளில் பயனடையும் வகையில், திண்டுக்கல் இரயில் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் மருத்துவ விற்பனை நிலையத்தை ரயில்வே அமைக்க உள்ளது. இந்திய இரயில்வே மின் கொள்முதல் அமைப்பு (Indian Railways E-Procurement System - IREPS) இல் மின்-ஏலத்தின் மூலம் அதிக ஏலம் எடுத்தவருக்கு கடை அமைக்க 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள் மருந்துக் கடையை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகள் மற்றும் உரிமத்தைப் பெற வேண்டும் மற்றும் மருந்துகளை சேமிப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ விதிகளுக்கும் இணங்க வேண்டும்.

பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவுக்கான நோடல் ஏஜென்சியுடன், அதாவது, இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுடன் ஜன் ஔஷதி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். வெற்றிகரமான ஏலதாரர் ரயில்வேயின் அனைத்து வணிக விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கடைப்பிடித்து PMBJKs கடையை நடத்த வேண்டும். இதற்கான வைப்புத் தொகை 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஜன் ஔஷதி மருத்துவ அங்காடியைத் திறக்கத் மருந்தியல் பட்டம் (பி. பார்மா B-pharm அல்லது டி. பார்மா D-pharm) பெற்ற இருக்க வேண்டும் எனத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத் தகவலுக்கு 9003862968 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தியல் படித்தோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரை ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Wasim Akram : "8 கிலோ இறைச்சியை சாப்பிட்டால்..." - பாக். வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.