ETV Bharat / state

ஜெயலலிதா பிறந்தநாளன்று மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி - மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - ஜெயலலிதா

மதுரை: சாத்தமங்கலத்தில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளன்று மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி

author img

By

Published : Feb 20, 2020, 3:24 PM IST

மதுரை தனியாமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 29ஆம் தேதி சாத்தமங்கலம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

விழாவிற்காகப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதோடு, விழாவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எவ்வித பிரச்னையும், அசம்பாவிதமுமின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை சாத்தமங்கலம் கிராமத்தில், பிப்ரவரி 29 அன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.