எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தனது தந்தையாரின் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்துள்ளார். ஆனால், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தளபதி தலைமை நற்பணி மன்றம் சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் முதலமைச்சராக வர வேண்டும் - மதுரையை பரபரப்புக்குள்ளாக்கும் சுவரொட்டி - விஜய் அரசியல் சுவரொட்டி
மதுரை: வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என அவரது ரசிகர்களால் மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.