தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பெற வேண்டிய ஓய்வு கால பணப் பலன்களை பெறுவதில் உள்ள பிரச்னைகளைப் போக்க மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் ‘பென்ஷன் அதாலத்’ நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையில் அமைந்துள்ள ஓய்வூதிய அலுவலகத்தில், ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அதாலத் நடத்திட அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். ரயில்வே / டெலிகாம் போன்ற பிற துறைகளின் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கும், தபால் நிலையங்களிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்கள், தாமதங்களை சரிசெய்திடவும் இந்தக் கூட்டம் உதவியாக இருக்கும்.
ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள், ஓய்வூதியம் பெறுவதில் அலுவலர்களின் பதிலில் திருப்தி அடையாத வழக்குகளை மட்டுமே ஓய்வூதிய அதாலத்துக்கு கொண்டு வர முடியும். புதிய வழக்குகளை நேரடியாக கொண்டு வர முடியாது.
குறைகளை அனுப்ப வேண்டிய வழிமுறை
- Shri. P. Sonai, Sr. Accounts Officer, O/o the Postmaster General,Southern Region (TN), Madurai – 625 எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
- ஓய்வூதிய அதாலத்துக்கான குறைகளை சாதாரண தபால், பதிவு செய்யப்பட்ட தபால், ஸ்பீடு தபால் மூலம் மட்டுமே அனுப்ப முடியும்.
- தனியார் கூரியர்கள் மூலம் வரும் குறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
- அதில், "ஓய்வூதிய அதாலத் -2021" என்று தெளிவாக எழுதப்பட வேண்டும்
மதுரை ஓய்வூதிய அலுவலகம் வருகை:
ஓய்வூதியாளர்கள், தனிப்பட்ட முறையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரடியாக வருகை தரலாம். நேரில் வரமுடியாதவர்கள், கூட்டத்தில் கூகுள் மீட் வழியாக கலந்துக்கொள்ளலாம்.
கூகுள் மீட் வழியாக கலந்துக்கொள்பவர்கள் வீட்டின் முகவரி, மொபைல் எண் மற்றும் அருகிலுள்ள தபால் நிலையத்தின் பெயரை குறிப்பிட வேண்டும். அவர்களுக்கு,அஞ்சல் கணக்குகள் மற்றும் நிதித்துறை பொது மேலாளரான அனிதா மகாதாஸ் பதில் அளிப்பார்.