உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, தங்களின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.
”2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை தனி அலுவலர்கள் மூலம் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பேக்கேஜிங் டென்டர் முறை மூலம் அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது (2020) உள்ளாட்சித் தேர்தல் மூலம் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வரம்பிற்குக் கீழ் டெண்டர் முறையை மாற்ற வேண்டும்.
ஊராட்சிக்குச் சொந்தமான நிதியை அந்தந்த ஊராட்சிகள் குடிநீர், சாலை போன்ற அத்தியாவசியப் பணிகள் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அரசுக் கட்டடம், குடிமராமத்துப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை இந்தப் போராட்டத்தின்போது அவர்கள் முன்வைத்தனர்.
இதையும் படிங்க: மெக்கனிக் ஷாப்பில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு!