மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தான லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்; ”நான் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார அமைப்பின் கீழ் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டேன். அதனை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த நிலையில் 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் 2021 ஆம் ஆண்டு 9 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் சென்றேன். இந்த காலகட்டத்தில் எனக்கு வரவேண்டிய மாத சம்பளம் முழுமையாக கிடைத்தது. (சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது)
இந்நிலையில் தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் அவர்கள் அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பணிபுரியும் தொகுப்பு புதிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு சம்பளத்தை உடனடியாக திரும்பப் பெற்று கருவூலத்தில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: "வரலாற்று ஆய்வு நூலகம் இடமாற்றம் செய்யப்படாது" - JNU பதிவாளர் அறிவிப்பு!
மகப்பேறு கால விடுப்பின் பெறப்பட்ட சம்பளத் தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கை சட்டவிரோதமானது. மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளிலும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளது. எனவே தேசிய சுகாதார அமைப்பின் செயலர் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு உள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் மகப்பேறு ஊதியத்தை பிடித்தம் செய்வது குறித்து தேசிய சுகாதார திட்ட இயக்குனரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என வாதாடினார்.
விசாரணை செய்த நீதிபதி, தேசிய சுகாதார அமைப்பின் தமிழக இயக்குனர் ஷீலா பிரபாகர் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை இடை கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது உடன், இது குறித்து அரசு தரப்பில் சுகாதார துறை முதன்மைச் செயலாளர் தேசிய சுகாதாரத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: உலக யானைகள் தினம்: யானைகளை ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி?