உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 17 வயதான இளம்பெண்ணின் தாயார் ஒருவர் மனு ஒன்ளை தாக்கல் செய்துளளார். அதில் இளம்பெண்ணின் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஜன.6) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி , "17 வயது நிரம்பிய இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருவை கலைக்க இளம்பெண்ணின் விருப்பத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர், இளம் பெண்ணின் கருவை கலைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்படுகிறது. அத்துடன் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் இந்த வழக்கின் விசாரணையை முடித்து, இரண்டு மாதங்களுக்குள்ளாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: சிம் ஸ்வாப்: ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வட மாநில கும்பல்