ETV Bharat / state

"இபிஎஸ் கார் மீது கல்லெரிந்த விவகாரத்தில் ஓபிஎஸ் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்" - திண்டுக்கல் சீனிவாசன் சாடல்! - சென்னை செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற போது அவர் காரில் கல்லெரிந்த விவகாரம் பற்றி ஓபிஎஸ் பேசியிருப்பது நீலிக் கண்ணீராகத் தான் உள்ளது எனவும் இது போன்ற பல நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம் எனவும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:50 PM IST

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61ஆவது குருபூஜையை முன்னிட்டு, கடந்த 25ஆம் தேதி, பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு அணிவிப்பதற்காக மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள வங்கியில் இருந்து தேவரின் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார்.

கடந்த 6 நாட்களாக அந்த தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களால் வழிபடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கக் கவசம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கடந்த 25ஆம் தேதி தங்கக் கவசத்தை எடுத்து பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து விட்டு, தற்போது மறுபடியும் வங்கியில் மீண்டும் ஒப்படைத்துள்ளோம். எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாக நடந்து முடிந்துள்ளன.

அதிமுகவின் சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரும் போது யார் கல்வி வீசினார்கள் என்று எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்த பின்பு தான் எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாயின் வண்டியில் தான் சென்றோம்.

ஆனால் கல் எங்கு விழுந்தது என்று எங்களுக்கு தெரியாது. தற்போது காவல்துறையினர் இரண்டு பேரை விசாரித்து வருகின்றனர். காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பணம் கொடுத்தால் கல் வீசும் நபர்கள் உள்ளனர். அதே போல பணம் கொடுத்து அதை செய்ய வைத்திருப்பார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கருப்பு, சிவப்பு சேலை அணிந்து அங்கே நின்று கொண்டிருருந்த திமுக சகோதரிகள் ஒட்டு மொத்தமாக இரட்டை இலையை காண்பித்தார்கள். திமுக வேட்டி கட்டியவர்கள் கூட எடப்பாடி வாழ்க என்று கோஷமிட்டனர்.

கவர்னர் மாளிகையில் குண்டு வைத்த கருக்கா வினோத், நீட் தேர்வு பற்றி கூறியுள்ளான். அதே போல் தற்போது கல் வீசியவர்கள் யாரென காவல்துறை விசாரணையில் தான் தெரியும். நாங்கள் சென்றோம், அமைதியாக சாமி கும்பிட்டோம். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. வருகின்ற 2026 தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராக வருவார் இதுதான் எங்களுடைய எண்ணம் ஆகும்.

ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார் அதை நீங்கள் தான் கேட்க வேண்டும். ஓபிஎஸ் கூறுவது தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடுவது போல உள்ளது. இந்த நாடகம் ஒருபோதும் அதிமுகவிடம் எடுபடாது ஏற்கனவே பல தோல்வியை சந்தித்தவர், தற்போது கல் வீசிய சம்பவம் பற்றி அவர் பேசியிருப்பது நீலிக் கண்ணீராகத் தான் உள்ளது. இது போன்ற பல நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம்.

ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு காவல்துறையில் கட்டுப்பாடு இல்லை. சில சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது. நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை வைத்து தான் விழாவுக்கு சென்றோம். காவல்துறை எங்களுக்கு திட்டமிட்டு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை அதுதான் உண்மை” என கூறினார்.

இதையும் படிங்க: விஜிலென்ஸ் அதிகாரி எனக் கூறி காதல்! கல்லூரி மாணவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம்! 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.