ETV Bharat / state

எட்டாவது முறையாக கரோனா நிவாரணம் வழங்கிய யாசகர்!

மதுரை: யாசகம் பெற்ற பணத்திலிருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த பூல் பாண்டியன் கரோனா நிதியாக பத்தாயிரத்தை மதுரை ஆட்சியரிடம் வழங்கினார்.

begger men pul pandiayn
begger men pul pandiayn
author img

By

Published : Aug 11, 2020, 1:53 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று பேர் உள்ளனர்.

இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்த பின்னர், உறவினர்களால் கைவிடப்பட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்து யாசகமாக பெற்ற பணத்தை பள்ளிகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் நன்கொடையாக வழங்கிவருகிறார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் மதுரை வந்த பூல் பாண்டியன், பொதுமுடக்கத்தால் இங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மதுரையின் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்ற பணத்தை கரோனா நிவாரண நிதியாக மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் தொடர்ந்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு முறையும் ரூபாய் 10ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி வரும் இவர், தற்போது வரை எட்டு தவணையாக 80ஆயிரம் ரூபாய் வரை வழங்கி உள்ளார்.

நிவாரணம் வழங்கிய முதியவர்

இதுகுறித்து பூல் பாண்டியன் கூறுகையில், "காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தேவையான பொருள்கள் வாங்கி கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறேன். இப்போதும் அந்தச் சேவையை செய்வது பெருமையாக உள்ளது. இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் யாசகம் பெற்ற பணத்திலிருந்து நிவாரணம் வழங்குவதை தொடர்ந்து மேற்கொள்வேன் " என்றார்.

இதையும் படிங்க : அங்கொடா லொக்கா மரண வழக்கில் புதிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.