ETV Bharat / state

ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு - ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வழக்கு உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, பணி நிலவரம் குறித்து பதிலளிக்க மத்திய கலாசாரத் துறை, தமிழ்நாடு கல்வெட்டுத் துறை ஆகியவற்றுக்கு உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

court
author img

By

Published : Oct 11, 2019, 3:30 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், R.S. மங்கலம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, சமஸ்கிருதம் என 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 ஆயிரம் தலைப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகள் உள்ளன.

இந்த நூலகத்தில் பழமையான புத்தகங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்டவை போதிய பராமரிப்பின்றி உள்ளன. எனவே, அவற்றை பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்த வேண்டும். அதை பொதுமக்களின் பார்வைக்காக இணையதளம் உள்ளிட்ட பொது வெளியில் காட்சிப் படுத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில், 2014இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 7.5 லட்சம் ரூபாயில் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடக்கிறது. ஓராண்டிற்குள் பணி நிறைவடையும்' என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓலைச்சுவடிகள், டிஜிட்டல் மயமாக்கப்படும் என உலகத் தமிழ் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019 வரை பணிகள் நிறைவடையாதது ஏன் என்றும் அதனை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, செலவு விவரம், பணி நிலவரம் குறித்து மத்திய கலாசாரத்துறை செயலாளர், தமிழக ஆய்வு உதவி கண்காணிப்பாளர், சரஸ்வதி மஹால் நுாலக இயக்குநருக்கு நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Intro:சரஸ்வதி மஹால் ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்த கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பனை ஓலைகள் , கல்வெட்டுகள், பழமையான புத்தகங்கள் உள்ளிட்ட வரலாற்று சான்றுகளை ஆவண படுத்த வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க உத்தரவு .Body:சரஸ்வதி மஹால் ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்த கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பனை ஓலைகள் , கல்வெட்டுகள், பழமையான புத்தகங்கள் உள்ளிட்ட வரலாற்று சான்றுகளை ஆவண படுத்த வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க உத்தரவு .

ராமநாதபுரம் மாவட்டம் R.S. மங்கலம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் , உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளா ர்.

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமை வாய்ந்தது.. இது தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷமாக உள்ளது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான பனை ஓலைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளது. மொத்தம் 49 ஆயிரம் தொகுதிகள் உள்ளன.
தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், இந்த நூலகம் தொடங்கப்பட்டது . தமிழகத்தின் கலாச்சார பொக்கிஷமாக உள்ளது. இந்த நூலகத்தில் பழமையான புத்தகங்கள் , கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்டவை உள்ளன. தற்போது வரை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் உறுதுணையாக இந்த நூலகம் . உள்ளது

இந்த நூலகத்தில் முற்கால சோழர்களின் வரலாற்று ஆவணங்களான மணிபல்லவம் நடையில் எழுதப்பட்ட சான்றுகளும் உள்ளன .மேலும் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய தன்வந்திரி மஹால் மருத்துவமனை சிவரகசியம் என்ற நூலும் இங்கு உள்ளது . இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் எழுதப்பட்டது.

மேலும் பல கோவில்களின் ஸ்தல புராணங்கள் வரலாற்று ஆவணங்களாக. இங்கு உள்ளன . இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு மர பீரோவில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 941 புத்தகங்களும் இங்கு உள்ளன .
இவை அனைத்தும் பழங்கால மன்னர்கள் மற்றும் மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை அறிவியல் மருத்துவம் குறித்து அது பயனுள்ள தகவலாக வரலாற்று ஆவணங்களாக உள்ளன .
எனவே தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பனை ஓலைகள் , கல்வெட்டுக ள், பழமையான புத்தகங்கள் உள்ளிட்ட வரலாற்று சான்றுகளை கணினி மூலம் டிஜிட்டல் மயமாக் கி வரலாற்று ஆவணங்களை ஆவண படுத்த வேண்டும். பின்னர் அதை பொதுமக்களின் பார்வைக்காக இணையதளம் உள்ளிட்ட பொது வெளியில் காட்சி படுத்த. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் , இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் , சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சரஸ்வதி மஹால் நூலகம் சார்பில் வழக்கறிஞர், இந்த கணினி மூலம் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது , என்று கூறினார்

இதைத் தொடர்ந்து ,நூலகத்தில் எத்தனை பணியாளர்கள் வேலை செய்கிறார்கள், நூலகதிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய கலாச்சாரதுறை செயலாளர், தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இயக்குநர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, பதில் அளிக்க உத்தரவிட்டார் ..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.