தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கான பணியிடங்கள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நிரப்பப்படாமல் உள்ளன. ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (டிச.30) பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி செவிலியர் உதவியாளர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், "அரசு பணியை நம்பி படித்த நாங்கள் தற்போது வேலையின்றி உள்ளோம். அரசிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது படிப்பை நர்சிங் கவுன்சிலில்கூட பதிவுசெய்ய முடியவில்லை. எங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் வெளிநாட்டிற்கு சென்று பணிபுரிய முடியாத நிலையில் உள்ளோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து செவிலியர் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகி புவனலட்சுமி தெரிவித்ததாவது, "அரசு 10 ஆண்டுகள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம். எட்டாயிரம் குடும்பங்களின் நிலையை அறிந்து அரசு செயல்பட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்