மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான இன்று (மே 12) தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், ”தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் செவிலியர்கள் போட்டித் தேர்வின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றும் அவர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றாமல் சுமார் 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் காலதாமதப்படுத்தி வருகின்றனர். நிரந்தர செவிலியராக மாற்றி இணையான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் அரசுக்கு வலியுறுத்தும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தச் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யை நேரில் சந்தித்து உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்யவும் கேட்டுக்கொண்டனர்.