ETV Bharat / state

'எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது' - madurai

மதுரை: நாம் வசிக்கும் இடங்களில் கட்சியின் செல்வாக்கையும், சின்னத்தின் செல்வாக்கையும் வளர்த்தெடுத்தால், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

திருமங்கலம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  மதுரை  ஆர்பி உதயகுமார்  அதிமுக  திருமங்கலம்  rb udhayakumar  madurai  stalin
எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்யமுடியாது- ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Jun 21, 2020, 8:11 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பயணியர் விடுதியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது, "திருமங்கலம் நகராட்சி சாலைகள் மேம்படுத்தப்பட்டு, மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தது உள்ளிட்ட செயல்களால் தற்போது மாநிலங்கள் அளவில் சிறந்த நகராட்சி என்ற பெயரை திருமங்கலம் பெற்றுள்ளது.

டெல்லியில் நமது திருமங்கலத்தை பற்றி பேசுகிறார்கள். திருமங்கலம் ஒன்றியத்திற்கு தேசிய விருதாக ரூ. 25 லட்சம் வழங்கப்பட உள்ளது. சின்னத்தின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் நாம் வசிக்கும் இடத்தில் வளர்த்தெடுத்தால், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக பல்வேறு பொய் வழக்குகளைத் தொடுக்கிறது. தஞ்சாவூரில் சாலை அமைப்பதில் ஊழல் என்று பொய்யான வழக்கை தொடுக்கிறார்கள். அதேபோல் 12,542 கிராமங்களுக்கு இலவச இணையதள வசதி செய்து கொடுக்கும் பணிக்கு ஒப்பந்தம் இன்னும் செய்யாத போது அதில் ஊழல் இருக்கிறது என்று மற்றொரு பொய்யான வழக்குகளை தொடுக்கிறார்கள்.

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்யமுடியாது- ஆர்.பி. உதயகுமார்

முகாந்திரம் இல்லாமலும், அரசியல் விளம்பரத்திற்காகவும் வழக்குத் தொடுக்கிறது என நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் திமுகவின் மூக்கு அறுபட்டுள்ளது. வழக்கையும் வாபஸ் பெற்றுள்ளது. நமது உழைப்பை திமுக திசை திருப்புகிறது, மக்களை குழப்புகிறது. எனவே, மக்களைத் தெளிவாக வைத்திருக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமது நிர்வாகிகளுக்கு இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: 'அன்பும் பாசமும் நிறைந்த முதலமைச்சருக்கு கரோனா வராது' -செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.