ETV Bharat / state

'எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது' - அமைச்சர் பேட்டி - தர்பார்

மதுரை: எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என மதுரையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  தெரிவித்துள்ளார்.

Minister of Information Technology
Minister of Information Technology
author img

By

Published : Jan 22, 2020, 3:29 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

அவ்விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், 'பொதுவாக இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் பற்றி கருத்துக் கூறுவது என்பது முழுமையாக அறிந்து கூற வேண்டும். கொள்கையில் மாற்றுக்கருத்து இருக்குமானால் மக்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடைமுறையையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும்.

சமூக நீதியின் காவலனாகத் திகழ்ந்த பெரியாரை பற்றி ரஜினி கூறியது, தமிழ்நாடு மக்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. அவருடைய தர்பார் படத்தை அனைவரும் பார்த்துள்ளோம். அதேபோன்று இன்றைக்குத் தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் என்ன தீர்ப்பு தரப் போகிறார்கள் என்பதை மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

'எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது'

தொடர்ந்து பேசிய அமைச்சர், 'எதன் அடிப்படையில் பெரியார் குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார் என்ற ஆய்வு தேவையற்றது. பெரியார் குறித்து ரஜினி கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம். மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்து எழுந்து வந்தாலும், எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பெரியார் வழியில் அதிமுக பயணிக்கும்' - அமைச்சர் செங்கோட்டையன்!

Intro:*பெரியார் குறித்து கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் எச்சிலை துப்பியதற்கு பிறகு துடைத்தாலும் துப்பியது துப்பியதுதான் - எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*பெரியார் குறித்து கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் எச்சிலை துப்பியதற்கு பிறகு துடைத்தாலும் துப்பியது துப்பியதுதான் - எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

*பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது:*

இட்டுக்கட்டி சொல்வதெல்லாம் தவறு, முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டணி குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கூடாது என்பதை வேண்டுகோளாக கூறியிருக்கிறார்கள்.

அதேபோன்று கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கின்ற இயக்கமாக அதிமுக இருந்து வருவதாக முதல்வர் பொதுகூட்டத்தின் வாயிலாக தெளிவாக கூறியிருக்கிறார்.

பொதுவாக இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் பற்றி கருத்துக் கூறுவது என்பது முழுமையாக அறிந்து கூற வேண்டும், கொள்கையில் மாற்றுக்கருத்து இருக்குமானால் மக்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடைமுறையும் கற்று தெரிந்திருக்க வேண்டும்.

சமூக நீதியின் காவலனாக திகழ்ந்த பெரியாரை பற்றி ரஜினி கூறி, தமிழக மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. அவருடைய தர்பார் படத்தை அனைவரும் பார்த்துள்ளோம், அதேபோன்று இன்றைக்கு தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் என்ன தீர்ப்பு தரப் போகிறார்கள் என்பதை மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எதன் அடிப்படையில் பெரியார் குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளர் என்ற ஆய்வு தேவையற்றது.

எதிர்க்கட்சியினர்கள் எந்தப் பக்கத்திலிருந்து பௌலிங் போட்டாலும் சிக்சரும்,போருமாக முதல்வர் அடித்து வருவதால் எதிரிகள் மிரண்டு போய் இருக்கிறார்கள். ஆகையால் மக்கள் முதல்வருக்கு லைக் கொடுத்து உள்ளார்கள்.

பெரியார் குறித்து கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் எச்சிலை துப்பியதற்கு பிறகு துடைத்தாலும் துப்பியது துப்பியதுதான் போன்று செயல்தான் என்று கூறவேண்டும். எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது.

குடியுரிமை சட்டம் என்பது எவருக்கும் குடியுரிமை பறிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.