மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அங்கு துரித கதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் அம்மருத்துவமனையில் இதுவரை 268 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று கரோனாவால் எவரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 165 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, தற்போது மொத்தம் 100 பேர் இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : அனைத்து கட்சியும் எனக்கு வேண்டும் - பிரதமர் பாராட்டிய மோகன்!