ETV Bharat / state

'அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை'- ஹெச். ராஜா - அமித் ஷா வருகை ரஜினி கட்சி

அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை எனவும், ரஜினி சுயமாக சிந்திக்கக்கூடியவர் என்றும் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

amith sha arrival and rajini party
'அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை'- ஹெச். ராஜா
author img

By

Published : Dec 10, 2020, 10:27 PM IST

பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக நினைக்கிறது. திமுக வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பரப்புரை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும். வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒப்பந்த பண்ணைமுறை நடைமுறையில் உள்ளது.

வேளாண் சட்டங்களின் நன்மை தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் பேசுபவர்கள் அயோக்கியர்கள் திமுக தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளை கொலை செய்துள்ளது. ஜனவரி 31வரை மட்டுமே ஆ.ராசாவால் பேசமுடியும். 2ஜி தீர்ப்பு விரைவில் வரவுள்ளதை ஆ.ராசா நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். திமுக கொள்ளைக்காரக் கூட்டம், வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காப்பாற்ற கொண்டுவரப்பட்டச் சட்டம்.

'அமித் ஷா வருகையால் ரஜினி கட்சி தொடங்கவில்லை'- ஹெச். ராஜா

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 1996ஆம் ஆண்டு திமுக ஆதரவாக குரல் கொடுத்தவர் ரஜினி, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது என்றார். ரஜினி கட்சியால் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்குதான் ஆபத்து.

2017ஆம் ஆண்டே கட்சி தொடங்குவது குறித்து முடிவை ரஜினி அறிவித்திருந்தார். ரஜினி சுயமாக சிந்திக்கக்கூடியவர். அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. அமித்ஷா வருகையால் ரஜினி கட்சித் தொடங்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: நேர்மையாளர் சூரப்பா! - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.