மதுரை: புத்தாண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று (ஜனவரி 1) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணி முதலே கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போதிருந்தே பக்தர்கள் நான்கு கோபுரவாசல் வீதியாகவும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
குடும்பத்துடன் புத்தாடை அணிந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அம்மனுக்கும், சுவாமிக்கும் அதிகாலை முதலாகவே பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவருகின்றன. அம்மன் சன்னதி செல்லும் கோயில் வாசலில் புத்தாண்டை முன்னிட்டு பூ அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், விநாயகர் திரு உருவம் அலங்கரிக்கப்பட்ட கோலமிட்டுள்ளது பக்தர்கள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்