ETV Bharat / state

மதுரை - தேனி ரயில்: டிக்கெட் கட்டணம் எவ்வளவு? - pm modi

சென்னையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, மதுரை-தேனி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் இன்று துவங்கி வைக்கிறார்.

author img

By

Published : May 26, 2022, 8:08 AM IST

Updated : May 26, 2022, 11:51 AM IST

மதுரை, தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த 75 கிமீ தூர அகல ரயில் பாதையில் மூன்று சாலை மேம்பாலங்கள், ஐந்து பெரிய பாலங்கள், 161 சிறிய பாலங்கள், 32 சுரங்கப்பாதைகள், 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி இன்று (26.5.2022) மாலை 05.45 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார். மதுரை - உசிலம்பட்டி வரையிலான 37 கிமீ அகல ரயில் பாதை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டிக்கு இடையேயான 21 கிமீ புதிய அகல ரயில் பாதை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும், ஆண்டிபட்டி - தேனி இடையேயான 17 கிமீ அகல ரயில் பாதை இந்த ஆண்டு மார்ச் மாதமும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியாக மதுரை தேனி பிரிவில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் எனவும் பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் அளித்துள்ளார். எனவே புதிய ரயில் சேவையும் துவக்கப்பட இருக்கிறது. பின்பு மே 27 முதல் வழக்கமான ரயில் சேவை துவக்கப்பட இருக்கிறது. மதுரை - தேனி இடையே ரயில் கட்டண விவரம் மதுரை - வடபழஞ்சி ரூபாய் 30ம் மதுரை - உசிலம்பட்டி ரூபாய் 30 மதுரை - ஆண்டிபட்டி ரூபாய் 35 மதுரை - தேனி ரூபாய் 45. மதுரை - தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை TO தேனி (புறப்பாடு)தேனி TO மதுரை (புறப்பாடு)
மதுரைகாலை 8:30தேனி மாலை 6:16
வடபழஞ்சி 8:44ஆண்டிப்பட்டி 6:28
உசிலம்பட்டி 9:04உசிலம்பட்டி6:46
ஆண்டிப்பட்டி 9:19வடபழஞ்சி7:04
தேனி 9:35 மதுரை7:35

இதையும் படிங்க: பஞ்சுபேட்டை திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடந்த பீமன் துரியோதனனை வதம் செய்த படுகள உற்சவம்!

Last Updated : May 26, 2022, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.