ETV Bharat / state

‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றம் செய்தால் கடும் நடவடிக்கை’ - madurai

மதுரை: தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்கள், தாக்குதல் புரிவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் எச்சரித்துள்ளார்.

madurai
author img

By

Published : Jun 15, 2019, 8:12 PM IST

மதுரை மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் உள்ளூரில் உள்ள அங்கன்வாடி மையம், பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லமுடியாத நிலை இருந்தது. இதனை சரிசெய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கிட மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை அடுத்து ஒரு பிரிவு மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ளன.

முருகன் செய்தியாளர் சந்திப்பு

பாதிக்கப்பட்டவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்குவதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமான சமூகவிரோதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தனலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Intro:
தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைகளை நடத்துவோர் அவர்கள் மீது தாக்குதல் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அந்த வகையில் இதில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கூறினார்
Body:தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர் முருகன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைகளை நடத்துவோர் அவர்கள் மீது தாக்குதல் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அந்த வகையில் இதில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கூறினார்

மதுரை மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வலையப்பட்டி எனும் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக நடைபெற்ற இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் சிலர் காயமடைந்தனர் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன இதனையடுத்து உள்ளூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மற்றும் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் செல்லாத நிலை இருந்தது

இதனையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டது இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார் தாக்குதலுக்குள்ளான நபர்களையும் பாதிப்பிற்கு ஆளான வீடுகளையும் பார்வையிட்டார்

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்சில நாட்களுக்கு முன்பாக வழிபட்டு கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கண்பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த பிரச்சினையை அடுத்து ஒரு பிரிவு மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர் அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ளன

வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு மற்றும் சில வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தப் பட்டுள்ள அனைத்து விஷயங்களும் கவனத்திற் கொண்டு வரப்பட்டுள்ளன அவை அனைத்தையும் உடனடியாக சரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதுபாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்த முழு தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளன ஆகையால் அதன் அடிப்படையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் மேலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் உரிய நிவாரணம் வழங்குவதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த தாக்குதலுக்கு காரணமான சமூகவிரோதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது அங்கன்வாடி பணியாளர்கள் அதே ஊரில் பணிபுரிவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டனகுறிப்பிட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வேறு கிராமங்களை பணிபுரிய உத்தரவிட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

அதேபோல கோவில் வழிபாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ள உரிமை யும் நிலைநிறுத்தப்படும் கோவில் யாரும் பட்டா நிலத்தில் அமையவில்லை அது புறம்போக்கு நிலத்தில் தான் உள்ளது ஆகையால் தாழ்த்தபட்ட மக்களுக்கு உரிய உரிமைகள் இங்கே நிலைநாட்டப்படும்

பாதிக்கப்பட்ட தரப்பு மக்களுக்கான இழப்பீடு வருகின்ற திங்கட்கிழமை முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளதுகச்சநத்தம் கிராம பிரச்சனைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமை கடைபிடிக்கப்படும் கிராமங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது ஆகையால் அது தொடர்பான சுற்றறிக்கைகள் மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து என்னை தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் தடுப்பதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன அதன் அடிப்படையில் தேசிய ஆணையமும் அதற்குரிய முயற்சிகளில் இறங்கியுள்ளது ஆகையால் இனி அதுபோன்ற வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெறுவது அறவே தடுக்கப் படும் என்றார்

இதன்போது மதுரை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தனலட்சுமி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.