ETV Bharat / state

120க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு; 400 உல்லாச வீடியோக்களை உருவாக்கிய காசிக்கு ஜாமீன் மறுப்பு!

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாச புகைப்படம் வீடியோ எடுத்தும் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 2, 2023, 8:39 PM IST

மதுரை: சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் காசி, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சமூக வலைத்தளங்கள் ஆசை வார்த்தைகளைக் கூறி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் எடுத்தது மற்றும் பணமோசடி செய்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்னும் காசி என்பவன், கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.

இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி காசி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் சிபிசிஐடி போலீசார் தரப்பில், சிறையில் உள்ள காசியிடம் 120 பெண்களின் படங்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள் உள்ளிட்டவை இவரது லேப்டாப்பில் இருந்து எடுக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் சில இளம் பெண்களிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் சிறுமிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 வயது சிறுமி சாட்சியும் அளித்துள்ளார். எனவே, வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் காசிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில், 'காசி மீது போக்சோ உள்ளிட்ட பல
வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். மேலும் சிலர் சாட்சியங்கள் அளிக்க உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து… ஊழியர்கள் காயம்; செய்தியாளர்கள்மீது தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.