ETV Bharat / state

மதுரையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடும் ஆசாமி கைது

author img

By

Published : Jan 14, 2023, 10:44 AM IST

மதுரையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர்களிடம் உள்ள பணத்தை திருடும் பலே ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடும் மர்ம நபர் கைது!

மதுரை: ஒத்தக்கடை பகுதியில் பொதுமக்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம், சித்தூர் ஓ.ஜி.குப்பத்தைச் சேர்ந்த கிஷோர் மற்றும் மதுரையை சேர்ந்த சதீஸ், சந்திரா, ஒத்தக்கடையை சேர்ந்த ராஜீ ஆகியோர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் கிஷோரை (55) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, மேலூர், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் கிஷோரும் அவரது கூட்டாளிகளும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி 5 நபர்களிடமிருந்து பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். அதன்பேரில் ரூ.10,85,000 கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அலுவலக கட்டுமானப்பணிகள் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.