ETV Bharat / state

ஓடி போகலாம் வா... காதலனின் அழைப்பை மறுத்த காதலி வெட்டி கொலை... - மதுரை

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயம். தன்னுடன் வந்துவிடுமாறு காதலன் அழைத்தற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் கைது.

காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆத்திரத்தில் கொலை செய்த காதலன்

author img

By

Published : Jul 9, 2022, 1:01 PM IST

மதுரை மாவட்டம் விராட்டிபத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் பொன்மேனி பகுதியைச் சேர்ந்த அபர்ணா (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் ஹரிஹரன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

ஆனால், பெண் வீட்டார் பெண் தர மறுத்து விட்டனர். மேலும் பெண்ணிற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்த நிச்சயித்தனர். இதனையறிந்த ஹரிஹரன், அபர்ணாவை தன்னுடன் வந்துவிட கேட்டுள்ளார்.

ஆனால், அபர்ணா பெற்றோரை விட்டுவர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஹரிஹரன், அபர்ணா வீட்டிற்குச் சென்று அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்தபடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மதுரை எஸ்.எஸ். காலனி காவல் துறையினர், அபர்ணாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தப்பிச் சென்ற ஹரிஹரனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், ஹரிஹரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க: திருப்பத்தூரில் தேர்தல் - விதிகளை மீறிய திமுக பிரமுகரை விரட்டிய போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.