ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த கோரிய வழக்கு தள்ளுபடி..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Mullai periyar dam: வல்லக்கடவு நிலப்பாதை வழியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Mullai Periyar Dam
Mullai Periyar Dam
author img

By

Published : Aug 21, 2023, 6:14 PM IST

மதுரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப்பாதை வழியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரையை சேர்ந்த பொறியாளர் ரெங்கன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவ ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை ஆகும். இந்த அணையில் 152 அடி வரை நீர் தேக்க முடியும். ஆனால், கேரள அரசின், நிர்பந்தங்களால் 152 அடி வரை தேக்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் எனில், அணையை பலப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைக்கு தமிழக பொறியாளர்களின், முயற்சிக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள், முல்லைப் பெரியாறு அணையை, வல்லக்கடவு நிலப்பாதை வழியாகச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆனால், கேரள அரசு அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான 1886ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, அணையை பராமரிக்க கேரள அரசின் அனுமதி தேவையில்லை. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப்பாதை வழியாகச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 23 மரங்களை வெட்டுவது உட்பட, பேபி அணையை, பழுதுபார்க்கவும் மற்றும் பலப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும். மேலும், வல்லக்கடவு நிலப்பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணையை அடைந்து அணையை வலுப்படுத்துவதற்காக, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், வழக்கு குறித்து பெரியாறு அணையின் மதுரை நிர்வாக பொறியாளர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.