ETV Bharat / state

'ராஜாஜி இறந்தபோது கண்ணீர் மல்க அமர்ந்திருந்த பெரியார், பண்பில் உயர்ந்த அந்தக் காட்சி...!'

author img

By

Published : Mar 15, 2020, 7:25 AM IST

Updated : Mar 15, 2020, 10:46 AM IST

மதுரை: 'ராஜாஜி இறந்தபோது அந்த இடுகாட்டில் பெரியார் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார். பண்பில் உயர்ந்த அந்தக் காட்சியை, நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கண்டேன்' என்று ஓவியர் டிராட்ஸ்கி மருது புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

mu ramasamy book release  mu ramasamy book release about m r radha in madurai  எம் ஆர் ராதா புத்தகம்  ராதா - நாடகத் தடையும் நாடகச் சட்டமும்  நிஜ நாடக அறிஞர் பேராசிரியர் மு.ராமசாமி  மு ராமசாமி புத்தக வெளியீட்டு விழா
நிஜ நாடக அறிஞர் பேராசிரியர் மு.ராமசாமி

'ராதா - நாடகத் தடையும் நாடகச் சட்டமும்' என்னும் தலைப்பில் பேராசிரியர் மு. ராமசாமி எழுதிய நூலின் வெளியீட்டு விழா மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் இ.கி. ராமசாமி தலைமை வகிக்க, விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் கருணானந்தம் நூலை வெளியிட்டார்.

இவ்விழாவில் ஏற்புரையாற்றிய முனைவர் மு.ராமசாமி, "1954ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர். ராதாவின் 'வால்மீகி ராமாணம்' என்ற நாடகம் மதுரையிலுள்ள சந்திரா திரையரங்கில் நடைபெற்றபோது வைத்திநாதய்யர் மகன் வை. சங்கரன், விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு, திருச்சி மகாலிங்க அய்யர் உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானது. அவற்றையும் மீறி அந்நாடகம் பொதுமக்களின் ஆதரவோடு நடைபெற்றது.

1876ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி கொண்டுவந்த நாடகம் நிகழ்த்துதல் தடைச்சட்டத்தின் அடிப்படையில் 'வால்மீகி ராமாயணம்' நாடகத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். ஆனால், எம்.ஆர். ராதா, அரசியலமைப்புச் சட்டம் புதிதாக எழுதப்பட்ட விடுதலைப் பெற்ற இந்தியாவில் வெள்ளையர் கொண்டுவந்த முந்தையச் சட்டம் காலாவதியாகிவிட்டது என வாதத்தை முன்வைத்து வென்றார்.

1954ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்ற ஒரு இறுக்கமான ஒரு காலகட்டத்தில்தான், தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மத வெறுப்பு நடவடிக்கைகள் பல்வேறு வகையிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய துரதிருஷ்டம் பெரியாருக்குப் பின்னர் நமக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.

நூல் குறித்து மதிப்புரை வழங்கிய ஓவியர் டிராட்ஸ்கி மருது, "ராஜாஜி இறந்தபோது அந்த இடுகாட்டில் பெரியார் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார். பண்பில் உயர்ந்த அந்தக் காட்சியை, நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கண்டேன். பெரியாரின் போர்வாளாக அன்றைய காலகட்டத்தில் எம்.ஆர். ராதா திகழ்ந்தார்.

mu ramasamy book release  mu ramasamy book release about m r radha in madurai  எம் ஆர் ராதா புத்தகம்  ராதா - நாடகத் தடையும் நாடகச் சட்டமும்  நிஜ நாடக அறிஞர் பேராசிரியர் மு.ராமசாமி  மு ராமசாமி புத்தக வெளியீட்டு விழா
ஓவியர் டிராட்ஸ்கி மருது

இந்த நூல் வெளிப்படுத்தும் உணர்வும் அதுதான். இந்த நூலிலுள்ள தகவல்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. திராவிட இயக்கம் குறித்து சிலரின் பேச்சுகளுக்குப் பதிலடியாக அது அமையும்.

இன்றைக்கு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையே மத்திய அரசுதான் தீர்மானிக்கிறது. அப்படியொரு சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனது: திருச்சியில் பரிதாபம்

Last Updated : Mar 15, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.