ETV Bharat / state

சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க முயற்சித்த தாய் கைது!! - madurai

மதுரை மத்திய சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயற்சித்த தாயாரை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க முயற்சித்த தாய் கைது!!

author img

By

Published : Jul 15, 2022, 3:36 PM IST

மதுரை: மத்திய சிறையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் பெண் கைதிகள் தனிச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிறைவாசியை பார்வையாளர்கள் பார்க்க சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை முதல் மதியம் வரை அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் பெண்கள் தனிச்சிறையில் சுசீலாமேரி என்ற பெண் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8ஆம் தேதி முதல் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார்.

சுசீலாமேரியை நேர்காணல் மனு வழங்கி சந்திப்பதற்காக மத்திய சிறைக்கு வந்த சுசீலாமேரியின் தாயாரான பாத்திமாமேரி என்பவரை சிறையின் பிரதான வாயிலில் சிறைக்காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் சுமார் 120 கிராம் எடை மதிப்புள்ள 17 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்தாக பாத்திமாமேரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரிமேடு காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.