மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், அதிமுக எம்எல்ஏவுமான ராஜன்செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூட்டத்தில் பேசியதாவது, "திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கடின உழைப்பு இருந்தும் வெல்ல முடியவில்லை. நெருடல் காரணமாக தோல்வியை சந்தித்தோம். இதேபோல் அல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் உழைப்பவர்களுக்கும், மூத்த உறுப்பினர்களுக்கும் தலைமை மதிப்பு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுக்க வேண்டும். அப்படி மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பதவி அளிக்காவிட்டால், வேறு கட்சிக்கோ அல்லது ரசிகர் மன்றத்திற்கோ செல்லும் நிலை உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
முழு அதிகாரம் உள்ள ஒற்றை அதிமுக கட்சிக்கு வேண்டும் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது, கட்சிக்குள் மிகப்பெரிய புயலை கிளப்பிய நிலையில், பதவி அளிக்கவில்லை எனில் பிற கட்சிகளில் சேர வேண்டியிருக்கும் என்று மறைமுகமாக எச்சரித்திருப்பது, கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.