மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து விளாச்சேரியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே போஸ் மறைந்ததால்தான் இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல, அவர் வெளிநாடுவாழ் பிரதமர். அவர் மக்கள் குறித்து கவலைப்படாத ஒரு சாடிஸ்ட். தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதவாக்கரை" என்று காட்டமாக விமர்சித்தார்.
'மோடி ஒரு சாடிஸ்ட்.. எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை..! - ஸ்டாலின் காட்டம்
மதுரை: மோடி ஒரு சாடிஸ்ட்.. எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை.. என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து விளாச்சேரியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே போஸ் மறைந்ததால்தான் இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல, அவர் வெளிநாடுவாழ் பிரதமர். அவர் மக்கள் குறித்து கவலைப்படாத ஒரு சாடிஸ்ட். தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதவாக்கரை" என்று காட்டமாக விமர்சித்தார்.
Body:திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து மதுரை விளாச்சேரியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்று பரப்புரை மேற்கொண்டார்
அப்போது பேசிய அவர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் நின்றது இங்கு முன்னர் உறுப்பினராக இருந்த ஏ கே போஸ் மறைவினால் தான் என்றாலும் அவர் மறையாமல் இருந்தாலும் இங்கு இடைத்தேர்தல் கண்டிப்பா நடந்திருக்கும் காரணம் உயர் நீதிமன்ற தீர்ப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது அவரிடம் பெறப்பட்ட கைநாட்டு தான் அந்த சிக்கலுக்கு காரணம் அதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து திமுக வின் சார்பாக வென்றவர் நமது வேட்பாளர் டாக்டர் சரவணன்
ஜெயலலிதாவின் கையெழுத்து விவகாரத்திலேயே இப்போது ஆளுகின்றவர்கள் நடத்திய கூத்து தான் உலகறிந்தது ஆகையால் மீண்டும் அவர்கள் வரக்கூடாது என்பதற்காகத்தான் என்று டாக்டர் சரவணனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மோடியை திருப்பி அனுப்புவதற்கு தயாராகிவிட்டார்கள் அதேபோன்று தமிழகத்தை ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமி யையும் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு பிரதமர் அல்ல அவர் வெளிநாடு வாழ் பிரதமர் இந்தியாவிலேயே தங்குவதில்லை அவர் அதேபோன்று அவர் ஒரு சாடிஸ்ட் தமிழகத்தை ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு உதவாக்கரை
கொடநாட்டில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் குறித்து நீதிமன்றம் பேசக்கூடாது என்று எனக்கு உத்தரவிட்டு இருந்தாலும் அடுத்து தமிழகத்தில் அமையக்கூடிய திமுகவின் ஆட்சி இவர்களெல்லாம் இந்த குற்றவாளிகளை எல்லாம் கண்டறிந்து சிறைக்குள் தள்ளும்
தற்போது நடைபெறுகின்ற இந்த நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் களம் இதற்கு முன்னர் நடைபெற்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் இதில் அனைத்திலும் திமுக தான் வெற்றி பெறும் இதற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கண்டிப்பாக தொடர வாய்ப்பில்லை காங்கிரஸ் முஸ்லிம் லீக் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தற்போது உள்ள 97 சீடர்களோடு இந்த 22 சட்டமன்ற தொகுதிகளும் கிடைத்ததற்கு பிறகு பிறகு சட்டசபையில் எங்களின் எண்ணிக்கை 119 ஆக உயரும் அப்போது கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றார்
Conclusion: