மதுரை அரசு தோப்பூர் காசநோய் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 'ஏ' சின்டமேட்டிக் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என 100 பேருக்கு கபசுரக் குடிநீர் பொடி, ஆடாதோடை, மணப்பாகு, தாளி சாதி சூரண மாத்திரை ஆகிய சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கபசுரக் குடிநீர் பொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "கரோனா தொற்று காலத்தில் மதுரை மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாகத் திகழ்கிறது. தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனைக்குள் நுழைந்தால், பசுமையான இடங்களைப் பார்த்து நோய்கள் தீர்ந்துவிடும்.
சித்தா, ஹோமியோபதி மருத்துவமுறைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். மருந்து இல்லாமல் உலகம் போராடிக் கொண்டிருக்கிறது.
மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக காட்சியளிக்கிறார்கள். கபசுரக் குடிநீர் பொடி, ஆடாதோடை, மணப்பாகு, தாளி சாதி சூரண மாத்திரை ஆகிய இந்த ஹோமியோபதி மற்றும் சித்தா மருந்துகளை உட்கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரித்து நோய்த் தொற்றில் இருந்து விடுபட உதவுகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு