மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பும், ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த ஆண்டு ஒரு கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 83 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இரண்டாயிரத்து 363 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு ஏதும் நடைபெறாது” என்றார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: செம்மலை பங்கேற்பு!