ETV Bharat / state

இந்திய ரயில்வே துறை மோடியின் கண்காணிப்பில் சிறப்பாக இயங்குகிறது- அமைச்சர் செல்லூர் ராஜூ - செல்லூர் ராஜூ

மதுரை: இந்தியாவில் ரயில்வே துறை மோடி அவர்களின் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
author img

By

Published : Mar 8, 2019, 11:27 PM IST

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக் கூடிய மதுரை ரயில் நிலையத்தை இந்தியாவிலேயே இரண்டாவது அழகிய ரயில் நிலையம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தை, மேலும் அழகுபடுத்துவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய ரயில்வேத் துறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.நவீன தங்கும் விடுதி, நடைமேடைகள் என பல்வேறு பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, "மதுரை ரயில் நிலையத்திற்கு முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. மதுரையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சுமார் 58 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை ரயில் நிலையத்தை தினசரி 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை மோடியின் தலைமையில் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவே மோடி அவர்களுக்கு நன்றி", என்றார்.

minister sellur raju

ஈரோடு 08.03.2019
சதாசிவம்
திமுகவின் சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு... 

அதிமுக கூட்டணியோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் தேமுதிக திமுகவுடன் மறு புறம் பேசுவது அரசியல் நாகரீகம் அற்றது என திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திமுக கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார் இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தனது அரசியல் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன் என்றார்  செய்தியாளர்களை ஒருமையிலும் அச்சுறுத்தும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது என்றார். பூட்டிய வீட்டில் எலி எப்படி சிக்கி கொண்டு வழிதெரியாமல் தவிக்கின்ற நிலையில் இருக்குமோ அதே போன்று தான் தற்போது தேமுதிகவின் நிலையென சந்திரகுமார் விமர்சித்தார் சக அரசியல் கட்சிகளை குறித்து கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்த தனது மகனுக்கு பிரேமலதா விஜயகாந்த் முதலில் அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறினார் ஒரு கட்சியின் பெயரை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது தவறான ஒன்று ஊழல் செய்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு திமுகவை குறை கூறுவது கண்டனத்திற்குரியது என்றார் இதனைத் தொடர்ந்து பேசிய சந்திரகுமார் ஒரு மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்டு வருவது இயல்பான ஒன்று ஆனால் திருமணமான கணவர் இருக்கும் நிலையில் பக்கத்து வீட்டாரை பார்ப்பது என்னவென்று குற்றஞ்சாட்டினார் தேமுதிக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மற்றொரு அதிமுக அமைச்சர் இடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் நாகரீகம் அற்ற நிலையில் உச்சத்தைக் காட்டுகிறது என தெரிவித்தார்... 

Visual send mojo app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.