ETV Bharat / state

’6 மாதத்தில் மதுரை புதுமையான நகரமாக மாறும்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: அடுத்த ஆறு மாதத்தில் மதுரை புதுமையான நகரமாக மாறும் அளவிற்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ
author img

By

Published : Aug 20, 2020, 10:54 PM IST

மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது உருவாகிவரும் கலாச்சார மையத்திற்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆக20) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வைகையை சீரமைக்கும் பணிக்காக மட்டும் ரூபாய் 364 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக காமராஜர் பாலம் முதல் ராஜா மில் பாலம் வரை இரண்டு கிலோமீட்டர், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் வரை 3 கிலோ மீட்டர் ஆக வைகை ஆற்றில் இரண்டு பக்கமும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.

இந்தப் பணிகளுக்காக, 303 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. இது தவிர, வைகை ஆற்றில் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர், நடைபாதை, மழைநீர் வடிகால், வாய்க்கால் மற்றும் 10 இடங்களில் படித்துறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த படித்துறைகள் அனைத்தும் பழமையும், புதுமையும் நிறைந்ததாக இருக்கும்.

தற்போது தடுப்புச்சுவர் கட்டும் பணி 8,200 மீட்டர் நீளத்திற்கு முடிவடைந்துள்ளது மீதமுள்ள பணிகள் அனைத்தும் வருகின்ற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். வைகையில் இருபுறமும் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு இந்த பகுதியில் நான்குவழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக 60 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மட்டும் 3 ஆயிரம் 200 மீட்டர் தூரத்திற்கு நிறைவடைந்துள்ளது.இதர பணிகள் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, மதுரை மாநகருக்குள் இரண்டு இடத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

அதன் மூலம் வண்டியூர் தெப்பக்குளத்தில் வைகையாற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் நிரம்பும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் மைதானத்தில் தற்போது 45 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

ஒரே நேரத்தில் 3,500 பேர் அமர்கின்ற அளவிற்கு மிக விசாலமாக கட்டப்படுவதுதான் இந்த அரங்கின் சிறப்பு. இதன் அடித்தளத்தில் 215 இருசக்கர வாகனங்களும் 250 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.

மதுரையின் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆரம்ப கட்டத்தில் நான் பெருமையுடன் கூறியதை எல்லோரும் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் சொன்னது அனைத்தும் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்னும் ஆறு மாதத்தில் மதுரை புதுமையான நகராக மாறப் போகிறது”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதுரை மாநகரை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். அவரின் கருத்தை அடியொற்றி நான் அதனை வழிமொழிந்தேன். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார்.

மதுரை மாநகராட்சிக்கு வெள்ளி விழா கொண்டாட முடிவு எடுத்தபோது, அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி வெறும் ஒரு கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்தார். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற அதிமுக அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:"முதலமைச்சர் மதுரைக்கு வரவிருப்பதால் கோவிட்-19 பாதிப்பு குறைந்து வருகிறது" செல்லூர் ராஜூ !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.