ETV Bharat / state

'ஸ்டாலின் வீசிய பந்துகளை சிக்சராக மாற்றியவர் முதலமைச்சர்' - ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Jan 22, 2020, 10:06 AM IST

மதுரை: முதலமைச்சரை டக் அவுட்டாக்க பலமுறை பந்து வீசினார் ஸ்டாலின், அனைத்து பந்துகளையும் சிக்சராக மாற்றியவர் முதலமைச்சர் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு Minister R.B.Udayakumar Speech Madurai Minister R.B.Udayakumar Speech Minister R.B.Udayakumar
Minister R.B.Udayakumar Speech

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு தலைமை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில்,"தனது ஆதரவு பெற்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்த எண்ணியவர்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.

இன்றைக்கும் ஐநா சபையில் எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் தான் பேசுபொருளாக உள்ளது. எம்ஜிஆருக்கு ஒன்று தெரியாது என்றால்.? அது மக்களை ஏமாற்ற மட்டும் தான் எம்ஜிஆருக்கு தெரியாது. ஆனால் கருணாநிதிக்கு மக்களை ஏமாற்றுவது எப்படி என்று தெரியும். இதனால் தான் எம்ஜிஆர் அரியாசனம் ஏறியதற்குப் பிறகு கலைஞர் அரியாசனத்தை ஏற முடியவில்லை.

அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டக்அவுட் செய்வதற்காக ஸ்டாலின் பலமுறை பந்து வீசியிருக்கிறார். ஆனால், அனைத்து பந்துகளையும் சிக்ஸராக தான் முதலமைச்சர் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியாளர்கள் புகைப்படக்கலைஞர் வந்துவிட்டார்களா எனப் பார்த்து விட்டு அவர்கள் முன்பாக பொங்கல் வைப்பது போன்று நாடகம் நடத்துவார்கள்.

ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்புதான், பொங்கலை கொண்டாடினோம். இதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு வராது என்று கூறுவது திமுக தான், அவ்வாறு கூறி அருகில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, பின்னர் அதிக விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி காலத்தில் நில ஆக்கிரமிப்பு, ரவுடியிசம், மின்சாரப் பற்றாகுறைகள் எவ்வாறு இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், திமுகவில் கருணாநிதிக்கு அடுத்ததாக மு.க. ஸ்டாலின் அவருக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் என்று வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, அதிமுக அரசிற்கு எதிராக திமுக 32 ஆயிரம் போராட்டங்களை நடத்தியும், தொடர்ந்து குறை கூறியும் வந்தது. ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தெலுங்கில் 'நாரப்பா'வான 'அசுரன்' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Intro:*முதல்வரை டக் அவுட்டாக்க பலமுறை பந்து வீசினார் ஸ்டாலின் அத்தனை பந்துகளையும் சிக்சராக மாற்றினார் முதல்வர் - திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு*
Body:*முதல்வரை டக் அவுட்டாக்க பலமுறை பந்து வீசினார் ஸ்டாலின் அத்தனை பந்துகளையும் சிக்சராக மாற்றினார் முதல்வர் - திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு*

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேட்டுப்பட்டியில் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

*தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது;*

உதயகுமார் ஆதரவு பெற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்த எண்ணியவர்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள்.

திருமங்கலம் தொகுதி ஒன்றிய குழு உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததற்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இன்றைக்கு ஐநா சபையில் சத்துணவு திட்டம் குறித்து பேசுபொருளாக உள்ளது.

எம்ஜிஆருக்கு ஒன்றும் தெரியாது என்றால்.?
எம்ஜிஆருக்கு மக்களை ஏமாற்ற தெரியாது, ஆனால் கருணாநிதிக்கு மக்களை ஏமாற்றுவது எப்படி என்று தெரியும். ஆகையால்தான் எம்ஜிஆர் அரியாசனம் ஏறியதற்குப் பிறகு கலைஞர் அரியாசனத்தை ஏற முடியவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டக்அவுட் செய்வதற்காக ஸ்டாலின் பலமுறை பந்து வீசுகிறார். ஆனால் அனைத்து பந்துகளையும் சிக்ஸராக தான் முதல்வர் அடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியாளர்கள் போட்டோகிராஃபர் வந்துவிட்டார்களா என பார்த்து விட்டு அவர்கள் முன்பாக பொங்கல் வைப்பது போன்று நாடகம் நடத்துவார்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்புதான் பொங்கலை கொண்டாடினார்.

இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வராது என்று கூறுவது திமுக கட்சியினர் தான், அவ்வாறு கூறியே அருகில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி பின்னர் அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

திமுக ஆட்சி காலத்தில் நில ஆக்கிரமிப்பு, ரௌடியிசம், மின்சார பற்றாகுறைகள் எவ்வாறு இருந்தது என்பது அறிந்ததே, இந்நிலையில் கருணாநிதிக்கு அடுத்ததாக ஸ்டாலின் அவருக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் என்று தொடர்ந்து வருகிறது.

32,000 போராட்டங்களை நடத்தியும், தொடர்ச்சியாக குறை கூறியும் இன்றைக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என பேசினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.