மதுரை மாவட்டம் அவனியாபுரம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில், தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய, பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட மசோதாவை நிறைவேற்றியதற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒன்றுகூடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 'காவிரி காவலன்' என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் காவிரி டெல்டா குறித்து எழுப்பிய கேள்வி, பொதுநலமானது இல்லை சுயநலத்துடன் கேட்கப்பட்டது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ரஜினியை வைத்து விவாதம் செய்வதால் எந்த பலனும் இல்லை!’ - ஆர்.பி. உதயகுமார்