மருத்துவ குணம் நிறைந்த மரங்களில் வேப்ப மரத்திற்கு முதன்மையான இடமுண்டு. அதனாலேயே அந்த மரத்தை தெய்வ நிலைக்கு உயர்த்தி வணங்கி வருவது தமிழர்களின் தொன்றுதொட்ட மரபாகும். பொதுவாகவே அனைத்து மதங்களிலும் பால் கசிவு என்பது இயல்பான ஒன்று. அரசமரம், வேப்ப மரங்களில் கசிகின்ற அந்தப் பால் போன்ற திரவம் பூச்சிக்கடி, சில நோய்களுக்கு முக்கிய மருந்தாகத் திகழ்கிறது.
பாம்பு, தேள், வண்டு உள்ளிட்ட விஷப் பூச்சிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேப்ப மரத்தின் பாலை தென்மாவட்ட மக்கள் பயன்படுத்துவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கருவேல மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் வேப்பமரம் ஒன்று உள்ளது.
அதில் கடந்த சில நாள்களாக பால் வடிந்து கொண்டிருப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்து மக்கள் வந்து இருந்து அந்தப் பாலை மருந்துக்காக பிடித்துச் செல்கின்றனர். சிலர் இதனை தெய்வச் செயல் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதி விண்ணில் பறந்து பரப்புரை செய்தாலும் திமுகவுக்கு மாற்றம் கிடைக்காது - ஓ.எஸ். மணியன்