ETV Bharat / state

வாகனங்களில் வெளியில் தெரியும்படி உள்ள தலைவர்களின் புகைப்படங்களை நீக்க உத்தரவு - ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு

வாகனங்களில் வெளியில் தெரியும்படி, அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல எனவும், தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை நீக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

mhc-order-to-remove-all-leaders-sticker-in-car
வாகனங்களில் வெளியில் தெரியும்படி உள்ள தலைவர்களின் புகைப்படங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Sep 10, 2021, 11:03 AM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "50 விழுக்காடு வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. மேலும், மற்ற மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரியிலிருந்து பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல் துறையினரிடமிருந்து தப்பித்துவருகின்றனர்.

வழக்கறிஞர் ஸ்டிக்கர்

எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் ஓட்டுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு முன்னதாக நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு), புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "தற்போது வாகன போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பது இல்லை. வெளிச்சம் குறைவான இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். ஜீப்ரா கிராஸ், தேவையான இடங்களில் பேரிகார்டு அமைத்து சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்" என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஸ்டிக்கர் ஒட்டி சட்டவிரோத செயல்கள்

மேலும், வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டியவைகளைக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், தற்போதைய சூழலில் வழக்கறிஞர், பிரஸ், காவல் துறை போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டியுள்ளனர். இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது. இது குறித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதேபோல் தங்களது வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள் தலைவர்களின் புகைப்படங்கள், சாதிக் கட்சித் தலைவர்களின் படங்கள் போன்றவை வெளிப்புறங்களில் தெரிவதுபோல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது காவல் துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக் கூடாது, சோதனை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.

காரில் தலைவர்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது?

அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகள், தலைவரின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. மேலும், இதனைப் பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை. எனவே, இதனைக் கருத்தில்கொண்டு நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. இதனை காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சகம், போக்குவரத்துத் துறை இயக்குநர் ஆகியோர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாகனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி வருடந்தோறும் உரிமம் புதுப்பித்தல், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லைட் (முகப்பு விளக்கு) முறையாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அலுவலர்கள் நீக்க வேண்டும்.

நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள்

வாகனத்தின் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும்.

வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது இதனை 60 நாள்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மணல் கொள்ளை: ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.