மதுரை மீனாட்சி கோயிலின் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்று திருக்கல்யாணத்தை நடத்துவது எனக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், காவலர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்ற நிலையில், திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுமா எனப் பொதுமக்களிடம் கேள்வி எழுந்தது.
![மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நேரலை meenaksi amman marriage meenaksi amman temple சித்திரைத் திருவிழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-meenakshi-holy-marriage-script-7208110_30042020003618_3004f_1588187178_478.jpg)
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மூவருக்கு கரோனா தொற்று!