உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நவராத்திரி விழா அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெறும். இந்நாள்களில் அம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவராத்திரி நாட்களில் நாள்தோறும் மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை, மாலை 6:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5:30 மணி முதல் 6:45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிேஷகம், பூஜைகள் நடைபெறுகிறது. அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்ஸவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள் மறுநாள் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தரிசிக்கலாம்.
அந்த வகையில் அக்.,17 அன்று நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், அக்,. 18இல் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் உபதேசம் செய்யும் அலங்காரத்திலும் காட்சியளித்தார். இன்று அக்டோபர் 19இல் சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும் அருட்காட்சி அளிக்கிறார்.
நாளை அக்டோபர் 20 விறகு விற்றல் அலங்காரத்திலும், அக்டோபர் 21இல் கடம்பவ வாசனி, அக்டோபர் 22இல் வேல்வனை செண்டு தொடுத்தல், அக்டோபர் 23இல் பட்டாபிேஷகம், அக்டோபர் 24இல் மகிஷாசூரமர்த்தினி, அக்டோபர் 25இல் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயில்: நவராத்திரி விழா 2ஆம் நாள் கோலாகலம்!