ETV Bharat / state

மாயமான மரகதலிங்கம் வழக்கு: 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

மதுரை: மாயமான மரகதலிங்கம் வழக்கைப் பொதுநல வழக்காக மாற்றி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் மாயமான மரகதலிங்கம் வழக்கு
மதுரையில் மாயமான மரகதலிங்கம் வழக்கு
author img

By

Published : Mar 3, 2021, 3:54 PM IST

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்குத் தாக்கல்செய்தார். அவர் தாக்கல்செய்த மனுவில், ’’மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே இருந்த பழமையான குன்னத்தூர் சத்திரத்தில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கிவந்தது. அதற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் இருந்தது.

இங்கு தினமும் பூஜை, வழிபாடு, அன்னதானம் என நடைபெற்றுவந்தது. நாளைடைவில் அந்தப் பழமையான சத்திரம் உறுதித்தன்மை இல்லாததைக் காரணம்காட்டி இடிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்து மரகதலிங்கம், சந்தனப்பேழை, செப்புப்பட்டயம் போன்றவை எடுக்கப்பட்டன.

இவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டு மதுரை மாநகராட்சி அலுவலகக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர், சில நாள்கள் கழித்து அந்த மரகதலிங்கம் மாயமாகிவிட்டது.

இதையடுத்து, அதைக் கண்டுபிடித்து மீண்டும் பொதுமக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்த நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் காணாமல்போன மரகத லிங்கத்தைக் கண்டுபிடித்து பொதுமக்களின் பார்வைக்கு வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட வேண்டும்’’ எனத் தாக்கல்செய்திருந்தார்.

இது குறித்து, விசாரித்த அப்போதையை நீதிபதி கிருபாகரன், மதுரை மாநகராட்சி ஆணையரை நீதிமன்றத்தில் நேரில் வந்து முன்னிலையாகி உத்தரவிட்டார். இதற்காக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதனடிப்படையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் இதுவரை எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் இந்த வழக்கைப் பொதுநல வழக்காக மாற்றி இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அமர்வு விசாரணைக்கு மாற்றி பட்டியலிட உத்தரவு பிறப்பித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.